கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டதால் இளம்பெண் கருத்தறுத்துக் கொலை.!! - Seithipunal
Seithipunal


கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டதால் இளம்பெண் கருத்தறுத்துக் கொலை.!!

கேரள மாநிலத்தில் உள்ள பாலக்கடவு பகுதியை சேர்ந்தவர் அகில். இவர் அங்கமாலி பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வருகிறார். இதே சூப்பர் மார்க்கெட்டில் பணி புரிபவர் ஆதிரா.

இந்த நிலையில், ஆதிரா அகிலுக்கு பொருளாதார நெருக்கடி வரும் போதெல்லாம் பணம் மற்றும் நகை கொடுத்து உதவி வந்துள்ளார். நாளடைவில், ஆதிரா தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு அகிலிடம் கேட்டுள்ளார். 

இதனால், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த மாதம் 29-ந் தேதி முதல் ஆதிராவை காணவில்லை என்று அவரது கணவர் மற்றும் உறவினர்கள் தேடியுள்ளனர்.

இருப்பினும் அவர் கிடைக்காததால் ஆந்திராவின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆதிராவின் செல்போனை ஆய்வு செய்தனர். 

அதில் ஆதிரா கடைசியாக அகிலுடன் பேசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஆதிராவை, அகில் காரில் அழைத்து சென்றதாக தெரிவித்தார்கள். இதன் படி போலீசார் அகிலை தேடி பிடித்து விசாரணை நடத்தினார்கள். 

அப்போது, அகில் ஆதிரா தன்னிடம் கடனாக தந்த நகை மற்றும் பணத்தை திருப்பிக் கேட்டதால் அவரை தான் ஆற்றுப்பகுதிக்கு கடத்திச் சென்று கழுத்தை நெரித்து கொன்றதாவும், அவரின் உடலை துண்டு, துண்டாக வெட்டி ஆற்றில் வீசியதாகவும் ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றனர். 

அங்கு ஆதிராவின் கால் மற்றும் உடல் பாகங்கள் கிடந்தன. அவற்றை கைப்பற்றிய போலீசார் திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் அகில் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for kill woman and pieaces of body in adira


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->