மனைவியை சமாதானப்படுத்த முதலாளியின் ரூ.1 கோடி ரூபாய் காரை திருடிய ஓட்டுநர்..!
man arrested for steal range rover car in madhya pradesh
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் பலாசியா பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் அகர்வால். இவர் ரேஞ்ச் ரோவர் என்றக் காரை வைத்திருக்கிறார். இந்த காரின் விலை சுமார் ரூ.1 கோடி ஆகும். இந்தக் காரின் ஓட்டுநராக காண்ட்வா மாவட்டத்தைச் சேர்ந்த துர்கேஷ் ராஜ்புத் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் துர்கேஷ் ராஜ்புத் நேற்று காலை காரை சுத்தம் செய்வதற்காக காரின் சாவியை கேட்டுள்ளார். அதன் படி காரின் உரிமையாளரும் சாவியைக் கொடுத்துள்ளார். அதன்பின்பு அவரை காணவில்லை.

இதனால் பதற்றமடைந்த ராகேஷ் ஓட்டுநர் துர்கேஷுக்கு போன் செய்தும் அவர் எடுக்காததால் தனது கார் திருடப்பட்டதை உணர்ந்த ராகேஷ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்தப் புகாரின் படி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, காரில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் மூலம் காரை திருடப்பட்ட 6 மணி நேரத்துக்குள் கண்டுபிடித்து மீட்டு ஓனரிடம் ஒப்படைத்து, ஓட்டுனரை கைது செய்தனர்.
இதையடுத்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையின் போது, தன் மீது கோபமாக இருக்கும் தனது மனைவியை சமாதானப்படுத்தக் காரைத் திருடியதாக கூறியுள்ளார். கார் ஓட்டுநர் அளித்த இந்த வாக்குமூலம் போலீசை ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
English Summary
man arrested for steal range rover car in madhya pradesh