ஹோட்டலில் பில் கொடுக்கச் சென்ற வாலிபர் - சரிந்து விழுந்து உயிரிழப்பு.!
man died due to heart attack in rajasthan
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராஜ்சமந்தில் நகராட்சி மன்ற துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்து வந்தவர் சச்சின். இவர் கடந்த சனிக்கிழமை அன்று அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட்டு முடித்துவிட்டு பில்லுக்கு பணம் கொடுப்பதற்காக கவுண்டரை நோக்கி சென்றார்.
அவரிடம் ஓட்டல் ஊழியர் பில்லைக் கொடுத்தார். இதையடுத்து, சச்சின் தனது பணப்பையிலிருந்து பணத்தை எடுக்க முயன்றார். அப்போது அவர் திடீரென கவுண்டரில் சரிந்து விழுந்தார்.
இதைப்பார்த்த உணவக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் உணவகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் முழுவதும் உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து அங்கிருந்த ஊழியர்களும் மக்களும் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதனைக்குப் பிறகு, மருத்துவர்கள் சச்சின் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர்.
சமீப காலங்களாக இளம் தலைமுறையினரிடையே தொடர்ந்து வரும் திடீர் மாரடைப்பு மரணங்கள் சமூக பிரச்சனையாக மாறியுள்ளது.
English Summary
man died due to heart attack in rajasthan