ஓணம் பண்டிகையில் நேர்ந்த கொடூரம் - இட்லி சாப்பிட்ட வாலிபர் பலி.! - Seithipunal
Seithipunal


கேரள மக்களால் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். அந்த வகையில் இந்த ஆண்டும் ஓணம் பண்டிகை செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி அதாவது இன்று வரை கொண்டாடப்படுகிறது.

ஆனால், இந்தாண்டு, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததன் காரணமாக இந்தாண்டு ஓணம் பண்டிகை வழக்கமான உற்சாகத்தோடு கொண்டாடப்படாது என்று அம்மாநில அரசு அறிவித்திருந்தது. 

இருப்பினும் ஆங்காங்கே சின்ன சின்ன ஏற்பாட்டுகளுடன் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி பாலக்காடு அருகே வாளையாரில் உள்ளூர் கிளப் ஏற்பாட்டில் உணவுப்போட்டி நடத்தப்பட்டது. இதில், ஏராளமானவர்கள் பங்கேற்றுள்ளனர். 

இந்த நிலையில், போட்டியில் கலந்துகொண்ட ஒருவர் இட்லியை சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மகிருந்தவர்கள் உடனே அவரை காப்பாற்ற முயன்று, எப்படியோ இட்லியை வெளியே எடுத்துள்ளனர்’ . 

பின்னர் அவரை, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அந்த நபர்  உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man died for eat idly in onam festival


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->