தற்போது ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக யார் நியமனம் ஆகியுள்ளார் தெரியுமா?
who been appointed Deputy Governor Reserve Bank of India
கடந்த ஜனவரி மாதத்துடன், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த எம்.டி.பத்ராவின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, அந்த பணியிடம் நீண்ட நாட்களாக காலியாக இருந்துவந்த நிலையில் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் (NCAER) தலைமை இயக்குநராக பணியாற்றுபவர் பூனம் குப்தா.

இவரை ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பூனம் குப்தாவை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.
இவர் 4-வது ரிசர்வ் வங்கி துணை ஆளுநராக 3 ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பதவியேற்கும் தேதி இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.
இந்தியாவின் பொருளாதார கொள்கை வகுப்பில் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது.
பொருளாதார நிபுணரான பூனம் குப்தா பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலிலும் உறுப்பினராவார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
who been appointed Deputy Governor Reserve Bank of India