டிரம்பின் புதிய வரி உத்தரவால் பாதிக்கப்பட்ட ஆசியா...!!! பங்குச்சந்தையில் எவ்வளவு சரிந்தது தெரியுமா? - Seithipunal
Seithipunal


டொனால்டு டிரம்ப் ,அமெரிக்க அதிபராக பதவியேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.அதில் ஒன்றாக, டிரம்ப் இந்தியாவின் அதிக வரிவிதிப்பை கடுமையாக விமர்சித்தார்.இந்த மாத தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் பேசுகையில், 'ஏப்ரல் 2-ம் தேதி பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை மாற்றி அமைக்கப் போவதாகவும், அதுதான் அமெரிக்காவின் விடுதலை நாளாக அமையும். தற்காலிகமான வரிகள், நாட்டை மாற்றி அமைக்கும் முக்கிய வரிவிதிப்புகள் அன்றைய தினம் அறிவிக்கப்படும்' எனத் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி,அமெரிக்க பொருட்கள் மீது எந்த அளவு வரி விதிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு பதிலுக்கு வரி விதிப்போம் எனவும் தெரிவித்து வந்தார்.

அவ்வகையில் , இந்திய பொருட்கள் மீது 26 % வரி விதிக்கப்படும் எனவும், சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 % கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

பிற நாடுகளின் பொருட்கள் மீதான வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தி அறிவித்ததையடுத்து ஆசிய பங்குச்சந்தைகள் தற்போது சரிவை சந்தித்துள்ளது.

ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு 2.68% சரிவையும், கோஸ்பி குறியீடு 1.29% சரிவையும்,  சீனாவின் CSI 300 குறியீடு 0.48% சரிவையும், ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு 1.16% சரிவையும்,தென் கொரியாவில், ஆஸ்திரேலியாவின் S&P/ASX 200 குறியீடு 1.17% சரிவையும் சந்தித்தது.இது ஆசிய பங்குச்சந்தையில் பெரும் பாதிப்பாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Asia hit by Trump new tax order how much stock market fell


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->