நள்ளிரவில் அதிரடியான தீர்ப்பு!!! வாக்கெடுப்பால் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது...!!!
Waqf Board Amendment Bill was passed by vote
கடந்த 1995 - ம் ஆண்டு மற்றும் 2013-ம் ஆண்டுகளில் வக்பு வாரிய சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி, மேலும் சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது.

அதன் பிறகு, பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில், நேற்று பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
அதன் மீதான விவாதம் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
இதனிடையே, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு 288 ஆதரவாக வாக்குகளும் , எதிராக 232 வாக்குகளும் பதிவாகின.
இதையடுத்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.இது குறித்த கலவையான விமர்சனங்கள் பலத் தரப்பிலிருந்து எழுந்து வருகிறது.
English Summary
Waqf Board Amendment Bill was passed by vote