2000 கடனுக்காக மனைவியின் படத்தை ஆபாசமாக சித்தரித்த ஏஜென்ட் - அவமானம் தாங்காமல் கணவன் எடுத்த விபரீத முடிவு.!
man sucide for 2000 loan in andira
ஆந்திர மாநிலத்தில் கடன் வழங்கும் செயலி ஏஜெண்ட்டின் மோசமான செயலால் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் நரேந்திரா. மீன்பிடி தொழில் செய்து வரும் இவர் கடந்த அக்டோபர் மாதம் அகிலா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில், பருவமழை மற்றும் வானிலை காரணமாக கடந்த சில நாட்களாக மீன்பிடிக்க செல்ல முடியாததால் அவருக்கு பொருளாதார நெருடிக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், நரேந்திரா கடன் வழங்கும் செயலியை நாடி 2 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதையடுத்து பணத்தை உடனடியாக செலுத்தும்படி செயலி ஏஜெண்ட் மோசமான வார்த்தைகளால் திட்டி தகவல் அனுப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நரேந்திரா கடனை முழுமையாக அடைக்க முடிவு செய்தார். ஆனால், அவரால் கடனை அடைக்க முடியாததால் தொடர்ந்து தகவல் அனுப்பப்பட்டு வந்தது. ஒருகட்டத்தில் கடன் செயலி ஏஜென்ட் நரேந்திராவின் மனைவி அகிலா படத்தை ஆபாசமாக சித்தரித்து, அவர்களின் உறவினர்களுக்கு அந்த ஏஜெண்ட் அனுப்பி படத்துடன் விலையையும் நிர்ணயித்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அகில சம்பவம் குறித்து நரேந்திராவிடம் விசாரித்த போதுதான் கடன் வழங்கும் செயலியில் கடன் பெற்றதாகவும், கடன் பெற்ற ஒரு வாரத்தில் இருந்து தொந்தரவு செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இந்தப் படம் குறித்து அவர்களது உறவினர்கள் நரேந்திராவிடம் விசாரித்துள்ளனர்.
இதனால் மனவேதனை அடைந்த நரேந்திரா தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நரேந்திராவின் உறவினர்கள் கடன் செயலி ஏஜெண்ட் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
English Summary
man sucide for 2000 loan in andira