பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்.. மணிப்பூர் மாநில முதல்வர் உறுதி.!! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் மாநிலத்தில் நிலவிவரும் கலவரத்திற்கு பொறுப்பேற்று அம்மாநில முதல்வர் பைரேன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகளும் பாஜகவை சேர்ந்த நிர்வாகிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மணிப்பூர் கலவரத்திற்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய மாநில முதல்வர் பைரேன் சிங் முடிவு செய்ததுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த தகவலை அறிந்த 100க்கும் மேற்பட்ட பெண் ஆதாரவாளர்கள் பைரேன் சிங் வீட்டின் முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மணிப்பூர் முதல்வர் ராஜினாமா செய்யக்கூடாது. அவர் மணிப்பூர் மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளார். எங்களின் முழு ஆதரவும் பைரேன் சிங்குக்கு உண்டு என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் மணிப்பூர் ஆளுநர் அனுசியாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்க முதல்வர் பைரேன் சிங் தனது வீட்டில் இருந்து புறப்பட முயன்றார். அப்போது அவரை சூழ்ந்து கொண்ட ஆதரவாளர்கள் அவர் வைத்திருந்த ராஜினாமா கடிதத்தை கிழித்தெறிந்தனர். 

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு தொற்றுக் கொண்டது. இதற்கிடையே பைரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "இந்த முக்கியமான தருணத்தில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manipur CM announced that he will not resign


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->