மணிப்பூர் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும் - உச்ச நீதிமன்றம் அதிரடி! - Seithipunal
Seithipunal


மணிப்பூரில் கூட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இரண்டு பெண்கள் தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. 

மணிப்பூர் வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையில் விசாரணை தொடங்கி இருக்கிறது. பழங்குடி பெண்களை யார் அவமானப்படுத்தப்பட்டார்களோ அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். 

பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் சார்பாக தொடரப்பட்ட மனு மற்றும் இந்த வழக்கின் விசாரணையை மணிப்பூர் மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று தெரிவித்து மத்திய அரசு தொடரப்பட்ட மனு குறித்த இந்த விவகாரத்தை தானாகவே முன் வந்து உச்சநீதிமன்றம் சில நோட்டீசுகளை பிறப்பித்திருந்தது.  

இது மனுக்கள் குறித்த விசாரணையும் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. 

உச்சநீதிமன்ற நீதிபதியின் இன்றைய கருத்தாக தெரிவித்திருப்பதாவது, ''மணிப்பூர் மாநிலத்தில் இந்த இரண்டு பெண்கள் ஆடைகள் இன்றி ஊர்வலமாக இழுத்து செல்லப்பட்டு பிறகு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை தனி ஒரு சம்பவமாக பார்க்கவில்லை. 

இது போன்ற பல சம்பவங்கள் மணிப்பூர் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. இந்த பெண்களுக்கான நீதியை நாங்கள் வழங்குவோம். ஆனால் அது மட்டுமே பிரச்சனை அல்ல மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த பிரச்சனையும் பலத்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.  

இப்படியான கொடுமைகளை சந்தித்து வரும் பல பெண்கள் இன்னும் புகார் அளிக்காமல் இருக்கிறார்கள். ஆனால் புகார் அளிக்காமல் இருக்கிறார்கள் என்ற காரணத்திற்காக அவற்றையெல்லாம் நாங்கள் விசாரிக்காமல் விட்டு விடமுடியாது. 

மணிப்பூர் மாநிலத்தில் இன்றைய தேதி வரை பெண்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்தும் அவற்றில் எத்தனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது'' என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manipur victims will get justice Supreme Court action


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->