மணிப்பூர் விவகாரம் | குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உறுதி! மணிப்பூர் முதல்வர் ட்விட்!! - Seithipunal
Seithipunal


கடந்த மே 4ம் தேதி மணிப்பூர் கலவரத்தின் போது இரண்டு பெண்களை ஆடையின்றி ஒரு கும்பல் அழைத்துச் சென்று பாலில் வன்கொடுமை செய்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இரு பெண்களையும் நிர்வாணமாக அந்த கும்பல் இழுத்துச் செல்லும் காணொளி நேற்று வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி "மணிப்பூர் சம்பவம் வெட்கக்கேடானது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முற்றிலும் தடுக்க வேண்டும். மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறை மன்னிக்க முடியாத குற்றம். சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தப்ப விடமாட்டோம்" என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் "நேற்று வெளிவந்த துயரமான காணொளியில் அவமரியாதை மற்றும் மனிதாபிமானமற்ற செயலுக்கு ஆளான இரண்டு பெண்களுக்காக எனது இதயம் வருந்துகிறது. வீடியோ வெளியானதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தானாக முன்வந்து மணிப்பூர் போலீசார் நடவடிக்கை எடுத்து இன்று காலை முக்கிய நபரை கைது செய்தனர்.

தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது, மேலும் குற்றவாளிகள் அனைவருக்கும் மரண தண்டனை வழங்குவது உட்பட கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்வோம்" என பதிவிட்டுள்ளார். இதற்கிடையே மத்திய உளத்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ManipurCM tweet death penalty is guaranteed for criminals


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->