'கணித மேதை சகுந்தலா தேவி நினைவு தினம்!.
Maths genius Shakuntala Devis death anniversary
இந்திய கணித மேதை' திருமதி.சகுந்தலா தேவி அவர்கள் நினைவு தினம்!.
சகுந்தலா தேவி (நவம்பர் 4, 1929 - ஏப்ரல் 21, 2013) ஒரு இந்தியக் கணித மேதை.
பெங்களூரில் பிறந்த அவரது தந்தை ஒரு "பிராமணர் சர்க்கஸ்" இல் பணிபுரிந்தார். அவருக்கு மூன்று வயது இருந்த போது, அவரது தந்தையுடன் சீட்டு வித்தைகள் செய்த பொழுதே அவரது கணிதத் திறன் புலப்பட்டது. இவரது கணித திறமையை கண்ட இவர் தந்தை தன் சர்க்கஸ் வேலையை விட்டுவிட்டு சகுந்தலாவின் கணித திறனை தெருக்களில் நிகழ்த்தி காட்டினார். சகுந்தலாவால் எந்த ஆரம்பக் கல்வியும் இல்லாமலே இத்தகைய கணித திறனை வெளிப்படுத்த முடிந்தது.
அவருக்கு ஆறு வயது இருந்த போது மைசூர் பல்கலைக்கழகத்தில் அவரது கணக்கு மற்றும் நினைவாற்றல் திறமைகளை வெளிப்படுத்தினார். எட்டு வயதில் அவர் அதையே அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் செய்து வெற்றி பெற்றார்.
1944 ல் தன் தந்தையுடன் லண்டன் சென்ற சகுந்தலா 1960 ன் மத்தியில் இந்தியா திரும்பினார். கொல்கத்தாவை சேர்ந்த பரிடோஸ் பேனர்ஜி என்னும் IAS அதிகாரியை மணந்தார். இவர்களுக்கு 1979 ல் விவாகரத்து ஆனது.1980 ல் சகுந்தலா பெங்களூருக்குத் திரும்பினார் .
தேவி தனது கணித திறனை காண்பிக்க உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டார் .இவற்றில் 1950ல் ஐரோப்பா மற்றும் 1976 ல் நியூயார்க் பயணமும் முக்கியமானவை.

1988ல் ஆர்தர் ஜென்சென் என்ற கலிபோர்னியா பல்கலைகழக உளவியல் பேராசிரியர் தேவியின் கணித திறனை பரிசோதித்தார் .அவற்றில் பெரிய எண்களை கொண்ட கணக்குகளும் அடக்கம்.உதாரணமாக 61,629,875 என்ற எண்ணின் கன மூலமும் , 170,859,375 என்ற எண்ணின் ஏழாவது மூலமும் கேட்கப்பட்டன. இதில் விந்தை என்னவெனில் ஆர்தர் கேள்வியை தேவியிடம் கேட்டுவிட்டு அவரது நோட்டு புத்தகத்தில் கேள்வியை குறிப்பதற்குள் தேவி பதிலை துல்லியமாக சொன்னதுதான்.1990ல் ஆர்தர் தனது ஆய்வின் முடிவை intelligence என்ற கல்வி இதழில் வெளியிட்டார்..
தேவி ஜோதிடத்திலும் தேர்ந்தவர் ஆவார். இவர் சமையல் குறிப்பு, கற்பனை நாவல்கள், புதிர் புத்தகங்கள் பலவற்றை எழுதி உள்ளார் .கணித மேதை சகுந்தலா தேவி தான் இந்தியாவில் ஒரு பால் ஈர்ப்பை பற்றி மிகவும் வெளிப்படையாக முதலில் "The World of Homosexuals" எனும் புத்தகத்தை எழுதியவர்.
English Summary
Maths genius Shakuntala Devis death anniversary