விதி இருக்குங்க! அதானி கடன் விபரங்களை வெளியிட முடியாது! மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!
Minister nirmala say adani loan detail
இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் படி அதானி நிறுவனத்தின் கடன் விபரங்களை வெளியிட முடியாது என்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியுள்ளது. இதில் அதானி குழுமத்திற்கு வங்கிகள் வழங்கிய கடன் தொடர்பான விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று, மக்களவை உறுப்பினர் தீபக் பாய்ஜ் கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், நடப்பு ஆண்டில் அதானி குழுமத்தின் நிகர லாபம், கடன் விவரம் உள்ளிட்டவைகள் குறித்தும் எழுத்துப்பூர்வமாக அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதில் அளிக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கியின் விதிப்படி எந்த ஒரு நிறுவனத்தின் கடன் விபரங்களையும் பொதுவெளியில் வெளியிட முடியாது.
எனவே, அதானி குழுமத்திற்கு வங்கிகள் வழங்கிய கடன் குறித்த விவரங்களை வெளியிட முடியாது. குறிப்பிட்ட வங்கி சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் தகவல்கள் ரிசர்வ் வங்கியால் ரகசியமாக காக்கப்படுகிறது.
எல்ஐசி நிறுவனம் அதானி நிறுவனத்துக்கு வழங்கிய மொத்த கடன் தொகையில், கடந்த டிசம்பர் 31ஆம் தேதி 6147 கோடியாக இருந்த நிலையில், அது தற்போது 6182 கோடி ரூபாயாக குறைந்துள்ளது" என்று நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.
English Summary
Minister nirmala say adani loan detail