கும்பமேளா குறித்து தவறான தகவல்.. 53 சமூக ஊடக கணக்குகள் முடக்கம்!
Misinformation about Kumbh Mela 53 Social Media Accounts Blocked
மகா கும்பமேளா குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக 53 சமூக ஊடக கணக்குகளை முடக்கி போலீசார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ந்தேதி உத்தர பிரதேசத்தில் தொடங்கியது. இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்நிலையில், இதுவரை 48 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கும்பமேளாவிற்கு வருகை தந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர் எனதெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் நேற்று மகி பூர்ணிமா என்பதால் திரிவேணி சங்கமத்தில் சுமார் 1.60 கோடி பக்தர்கள் புனித நீராடினர் என உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர்.
இந்தநிலையில், மகா கும்பமேளா குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக 53 சமூக ஊடக கணக்குகளை முடக்கி போலீசார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் கும்பமேளாவில் கூட்ட நெரிசல், தீ விபத்து என பழைய வீடியோக்களை வெளியிட்டு தவறான தகவலை பரப்பி பதற்றம் ஏற்படுத்திய பல சமூக ஊடக கணக்குகள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.
English Summary
Misinformation about Kumbh Mela 53 Social Media Accounts Blocked