உலக அழகி போட்டி - இந்தியாவில் எந்த மனநிலத்தில் தெரியுமா? - Seithipunal
Seithipunal


இந்த வருடத்திற்கான உலக அழகிப்போட்டி தெலுங்கானா மாநிலத்தில் வருகிற மே மாதம் 10-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தெலுங்கானா மாநில அரசு நடத்தும் இந்த போட்டியை பிரபலப்படுத்தும் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னை ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஜூபள்ளி கிருஷ்ணா ராவ் பேசியதாவது:-

72-வது உலக அழகி போட்டி தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் உள்பட கலாசார முக்கியத்துவம் வாய்ந்த 10 நகரங்களில் நடைபெறும். இதற்கான செலவை தெலுங்கானா சுற்றுலாத்துறையும், மிஸ் வேர்ல்ட் நிறுவனமும் சமமாக ஏற்றுக்கொள்ளும். 

உலக அழகிப் போட்டி நடத்துவது மாநிலத்தின் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம் செய்கின்றன. உண்மையில் இந்த போட்டியின் மூலம் மாநிலத்தின் பொருளாதாரம் உயரும்.

உலக அழகிப் போட்டியை தெலுங்கானா மாநிலத்தில் நடத்துவது வெறும் கவுரவப் பிரச்சினை அல்ல. உலகம் முழுவதும் பெண்களைக் கொண்டாட இது ஒரு வாய்ப்பு. அவர்களின் மன உறுதியை அங்கீகரிக்க இது ஒரு தெளிவான அழைப்பு" என்றுத் தெரிவித்தார்.

இதற்கிடையே ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் ரூ.71 ஆயிரம் கோடி நிதி நெருக்கடியில் தெலுங்கானா மாநில அரசு தத்தளிக்கும் போது ரூ.200 கோடி செலுத்தி, ஐதராபாத்தில் உலக அழகிப் போட்டி நடத்த வேண்டுமா? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

miss universe 2025 in telungana


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->