இந்திய மக்களை வங்கி வாசலில் நிற்க வைத்த நாள் இன்று! ராஜா 50 நாள்! மோடியை கலாய்த்த ராகுல் காந்தி! - Seithipunal
Seithipunal


கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி மாலை தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்தார். நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார்.  இதன் காரணமாக ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் திரும்ப பெற்றன. அதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக வங்கிகளின் வாசலில் கால் கடக்க நின்று ரூபாய் நோட்டுக்களை மாற்றினர். இந்த சம்பவத்தில் சில உயிரிழக்கவும் செய்தனர்.

மத்திய அரசு பழைய ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக  புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தியது. இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 50 நாட்களில் கருப்பு பணம் ஒழிந்து விட்டதாக மத்திய பாஜக அரசு அறிவித்தது. ஆனால் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த நடவடிக்கை தோல்வி அடைந்து விட்டதாக விமர்சனம் செய்து வந்தது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு இன்றோடு 6 ஆண்டுகள் நிறைவடைகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி "கருப்பு பணம் வரவில்லை, வறுமை தான் வந்தது. பணம் இல்லாத பொருளாதாரம் ஆகவில்லை, பொருளாதாரம் பலவீனம் தான் ஆனது. ஒழிந்தது பயங்கரவாதம் அல்ல, கோடிக்கான சிறு தொழில்கள் மற்றும் வேலைகள் தான். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் "ராஜா 50 நாட்கள்" வாக்குறுதியுடன் பொருளாதாரத்தை ஒழித்து விட்டார்" என மோடியை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi brought poverty cause of Demonetization


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->