மோடியின் உத்தரவாதம் அதானிகளின் ராஜ்ஜியத்துக்கானது..ராகுல்காந்தி சாடல்.!!
Modi guarantee for Adhani kingdom
மக்களவை தேர்தல் களம் நாளுக்குநாள் சூடுப்பிடித்து வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்களிடையே வார்த்தை போர் வெடித்துள்ளது. இந்தநிலையில், காங்கிரஸ் கட்சி முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி குறித்து கருத்தை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் , காங்கிரஸ் கட்சியின் உத்தரவதாங்களுக்கும் பாஜகவின் உத்தரவதாங்களுக்கும் வித்தியாசம் உள்ளது. காங்கிரஸ் உத்தரவாதங்கள் மக்கள் நலன் சார்ந்தது. மோடியின் உத்தரவாதம் என்பது அதானிகளின் ராஜ்ஜியத்துக்கானது.
செல்வந்தர்கள் செல்வத்தில் திளைக்கும் நாட்டில் விவசாயிகள் கையில் பணமில்லாமல் ஒருவேளை உணவுக்கு திண்டாடுகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
Modi guarantee for Adhani kingdom