பெண்களுக்கு மாதம் 4 ஆயிரம் - வாக்குறுதிகளை வாரி வழங்கும் ராகுல்காந்தி.!
monthly four thousand to woman ragul gandhi announce
தெலங்கானா மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சியினருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மேலும், தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்குடன் இரு கட்சிகளும் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளன.
இந்த நிலையில், பூபால்பள்ளி மாவட்டத்தில் காலேஷ்வரம் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர் ராவ் ஊழல் செய்து கொள்ளையடித்து பெரும் சொத்து சேர்த்துள்ளார்.
அவரது ஊழலால் பெண்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை சரி செய்வதற்காக காங்கிரஸ் கட்சி கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீண்டும் மக்களுக்கே வழங்கும் முடிவு செய்துள்ளோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
அந்தத் தொகையை அவர்கள் சேமிக்க முடியும். இதன் முதற்கட்டமாக மாதம் ரூ. 2,500 பெண்களின் வங்கிக்கணக்கில் வழங்கப்படும். சிலிண்டர் மானிய விலையில் ரூ. 500-க்கு வழங்கப்படும். அடுத்ததாக, ரூ.1,000-க்கு அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இதுதான் மக்களின் அரசு. தெலங்கானா மாநிலத்தின் முதல்வர் சநதிரசேகர் ராவ் ஒரு லட்சம் கோடி ஊழல் செய்து சொத்து சேர்த்துள்ளார்'' என்று குற்றம்சாட்டி உள்ளார்.
English Summary
monthly four thousand to woman ragul gandhi announce