இரக்கமில்லாத பாவிங்களா!கள்ளக்காதலனுடன் பெற்ற குழந்தையை சூடு வைத்து சித்திரவதை செய்த தாய்...!!!
mother and her lover tortured child by heating
ஆந்திரா மாநிலம், விஜயவாடா ஒய்.எஸ்.ஆர் காலனியை சேர்ந்தவர் வந்தனா என்பவர். இவருக்கு 3 வயத்தில் மகள் பிரசன்னா உள்ளன.இதில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து விட்டு தனியாக வந்தனா வசித்து வந்தார்.

அப்போது ஸ்ரீராம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.தனது கள்ளக்காதலனுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் குடியேறினார்.
இதில் தனது மகள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக எண்ணி கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்தனர். ஈவு, இரக்கமின்றி வந்தனா பெற்ற குழந்தையின் உடல் முழுவதும் சூடு வைத்தார்.
பிஞ்சு குழந்தை வலியால் அலறி துடித்தது. அப்பகுதி மக்கள் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால்,அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
பின்னர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரின் பேரில் காவலர்கள் மருத்துவமனைக்கு வந்து குழந்தையிடம் விசாரணை நடத்தினர்.இதில் உண்மை தெரிந்ததும்,வந்தனா மற்றும் அவரது கள்ளக்காதலனை கைது செய்து காவலர்கள் சிறையில் அடைத்தனர்.
English Summary
mother and her lover tortured child by heating