பாலூட்டும் தாய்மார்களுக்கு ரயில் நிலையங்களில் சிறப்பு வசதி.!
Mother feeding point in Mumbai railway station
மும்பையில் ரயில் நிலையங்களில் தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் முக்கிய போக்குவரத்தாக ரயில்சேவை இயங்கி வருகிறது. அந்த வகையில் மும்பை புறநகர் ரயில்களில் தினமும் 35 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர் இவர்களில் 20% பெண்கள்.
இதில் சிலர் குழந்தைகளுடன் பயணம் செய்தனர். புறநகர் ரயில்களில் பெண்களுக்கு தனிப்பெட்டி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு பால் கொடுக்க போதிய வசதி இல்லாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இந்த நிலையில் மும்பையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட சிறப்பு வசதி அமைக்கப்படும் என்று மத்திய ரயில்வே அறிவித்துள்ளது இந்த பாலூட்டும் அறையில் சொகுசு இருக்கை, குழந்தைகளுக்கு டயப்பர் மாற்றும் இடம், மின்விளக்கு, மின்விசிறி போன்ற வசதிகளும் செய்யப்பட உள்ளது.
English Summary
Mother feeding point in Mumbai railway station