ஜார்க்கண்ட் தேர்தலில் எம்.எஸ் தோனி!...தேர்தல் ஆணையம் பரபரப்பு உத்தரவு!
Ms dhoni in the jharkhand election election commission orders excitement
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கான சட்டசபைக்கு அடுத்த மாதம் நவம்பர் 13 மற்றும் 20-ம் தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சியினரிடையே தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.
இந்த நிலையில், பாஜக 66 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 19-ம் தேதி வெளியிட்டது. அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவர் பாபுலால் மராண்டி தன்வார் தொகுதியிலும், முன்னாள் முதல்வர் சிபு சோரனின் மூத்த மருமகள் சீதா சோரன் ஜம்தரா தொகுதியிலும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் 70 தொகுதிகளிலும், ஆர்.ஜே.டி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இதர தொகுதிகளிலும் போட்டியிடும் என்று இந்தியா கூட்டணி கட்சி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தேர்தல் ஆணைய அதிகாரி கே.ரவி குமார் தெரிவித்துள்ளதாவது, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் வாக்காளர்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வு மற்றும் வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் பணியை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Ms dhoni in the jharkhand election election commission orders excitement