வீட்டில் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய முஸ்லிம் பெண்.. வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


அலிகாரில் உள்ள முஸ்லீம் குடும்பம் ஏழு நாட்களுக்கு விநாயகர் சிலையை வீட்டில் வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 31ம் தேதி விநாயகர் சிலை வைத்து கொண்டாடினர். இந்த நிலையில் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், அலிகாரில் உள்ள முஸ்லீம் பெண் ஒருவர், நடைபெற்று வரும் விநாயக சதுர்த்தி விழாவின் ஒரு பகுதியாக, ஏழு நாட்களுக்கு விநாயகர் சிலையை அவரது வீட்டில் வைத்து வழிபாடு செய்து வருகிறார்.

 அதன்படி, ரூபி ஆசிப் கான் என்ற முஸ்லீம் பெண், விநாயக பெருமான் மீது கொண்ட அபரிமிதமான நம்பிக்கை காரணமாக, விநாயக சதுர்த்தி விழாவை கொண்டாடுகிறார். இதனை அவரது குடும்பத்தினர் எதிர்க்கவில்லை என்றும் கூறினார். 

மேலும் அந்த பெண் கூறுகையில், "நானும் எனது குடும்பத்தினரும் விநாயகர் சதுர்த்தியை விழாவை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு நாளும் விநாயகருக்கு பூஜை செய்து மோதகங்களை பரிமாறி வழிபட்டு வருகிறோம்" என்று அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Muslim women celebrate vinayagar chathurthi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->