அடிதூள்!!! எனது போராட்டம் இந்த தீய வட்டத்தை உடைப்பதாகும்...!!!- ராகுல் காந்தி
My struggle break vicious circle Rahul Gandhi
பேஷன் டிசைன் துறையில் சிறந்து விளங்க முயற்சிக்கும் ஜவுளி கைவினைஞர் 'விக்கி' என்பவரின் கடைக்கு, காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான 'ராகுல் காந்தி' சென்று கலந்துரையாடினார்.

இதுதொடர்பான வீடியோவை ஒன்றை ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.அதுமட்டுமின்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"ஜவுளி வடிவமைப்புத் துறையில் உச்சத்தில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவரை நான் ஒருபோதும் சந்தித்தது இல்லை.
விக்கி தொழிற்சாலையிலுள்ள கைவினைஞர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் கடுமையாக உழைக்கிறார்கள்.ஊசி மற்றும் நூலால் நெய்வதில் மேஜிக் செய்கிறார்கள்.
ஆனால் நிலைமை அப்படியே தான் இருக்கின்றது. அவர்களது திறமைக்கு எந்தப் பாராட்டும் இல்லை.மற்ற தொழில்களைப் போலவே பகுஜன்களுக்கு ஜவுளி மற்றும் பேஷன் துறையில் பிரதிநிதித்துவம் இல்லை.
கல்விக்கான அணுகல் அல்லது நெட்வொர்க்கில் இடம் இல்லை.உழைப்பாளிகளாக இருந்தபோதிலும் இந்த இளைஞர்கள் புறக்கணிப்பு மற்றும் அநீதியின் தீய வட்டத்தில் சிக்கியுள்ள மகாபாரதத்தின் அபிமன்யு போன்றவர்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
எனது போராட்டம் இந்த தீய வட்டத்தை உடைப்பதாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.இது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.
English Summary
My struggle break vicious circle Rahul Gandhi