கேரளாவில் பரவி வரும் மர்ம காய்ச்சல்- ஒரே நாளில் 3 பேர் பலி.!! - Seithipunal
Seithipunal


கேரளாவில் பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு இன்று ஒரே நாளில் 15,493 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 20 நாட்களில் 1,60,000 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த 8ம் தேதி தொடங்கியது.

பருவமழை தொடங்கியதும் மாநிலம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாநில சுகாதாரதுறையினர் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். மேலும் மாநிலம் முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவலும் சேகரிக்கப்பட்டு வருகிறது. 

கேரளா முழுவதும் நேற்றுவரை 1,60,000 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகினறனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில் கேரளாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 15,493 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவனந்தபுரத்தில் காய்ச்சல் பாதித்த ஒருவரும், பாலக்காட்டில் டெங்குவால் பாதித்த ஒருவரும், கொல்லத்தில் எலி காய்ச்சலில் ஒருவரும் பலியானதாக சுகாதார துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும் H1N1 வைரஸால் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mysterious fever spreading in Kerala 3 people died in one day


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->