எனவுண்டரில் நக்சலைட் சுட்டுக் கொலை - ஜார்கண்டில் பரபரப்பு.!
naxalite encounter in jarkhant
ஜார்கண்ட் மாநிலத்தில் உலா வரும் நக்சலைட்டுகளை கட்டுப்படுத்த மாநில போலீசாருடன் இணைந்து மத்திய பாதுகாப்புப்படையினரும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் சாய்பாசா பகுதியில் நக்சலைட்டுகள் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் படி அப்பகுதியில் ஜார்கண்ட் போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்புப்படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த என்கவுன்டரில் நக்சலைட்டு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பின்னர் சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட்டின் உடல் மற்றும் சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் சில நக்சலைட்டுகள் அப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பாதுகாப்புப்படையினர் அங்கு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
naxalite encounter in jarkhant