மகளைத் தாக்க வந்த காட்டுப்பன்றி.! உயிரைக்கொடுத்து போராடிய தாய்.! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கொர்பா மாவட்டம் டிலியமர் கிராமத்தை சேர்ந்தவர் துவசியா பைய் மகள் ரிங்கி. இவரும் தாய் துவசியவும் கிராமத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு விவசாய வேலைக்காக சென்றுள்ளார். 

அங்கு இருவரும் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது, தோட்டத்தில் மறைந்திருந்த காட்டுப்பன்றி ரிங்கியை நோக்கி வேகமாக ஓடி வந்தது. இதைபார்த்த  துவசியா வேகமாக சென்று காட்டுப்பன்றியிடமிருந்து தனது மகளை காப்பாற்ற முயற்சி செய்தார்.

அப்போது, தான் கையில் வைத்திருந்த மண் வெட்டியால் காட்டுப்பன்றியை தாக்கினார். ஆனால், தாய் துவசியாவை காட்டுப்பன்றி மிகக் கொடூரமாக தாக்கியது. இருப்பினும், தன் மகளை அவர் காட்டுப்பன்றி தாக்குதலில் இருந்து காப்பாற்ற பெரும் பாடுபட்டார்.

அதே நேரம், துவசியா தனது மகளை அங்கிருந்து ஓடுமாலா கூறினார். அதன் படி, ரிங்கி அங்கிருந்து ஓடி சென்று கிராமத்தினரிடமும், வனத்துறையினரிடமும் தெரிவித்தார். 

அந்த தகவலின் படி, கிராமத்தினரும், வனத்துறையினரும் அந்த தோட்டத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. என்னவென்றால், துவசியா காட்டுப்பன்றியை கொன்றிருந்தார். 

இருப்பினும், காட்டுப்பன்றி தாக்கியதில் துவசியாவின் முகம் உள்ளிட்ட உடல் பாகங்களில் படுகாயம் ஏற்பட்டு உயிரிழந்து கிடந்தார். இதை அடுத்து, வனத்துறையினர் துவசியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chatesgarh woman died for wild boar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->