சினிமா பாணியில் கணவனைக் கொன்று புதைத்து செப்டிக் டேங் கட்டிய மனைவி - கள்ளக்காதலனுடன் கைது.! - Seithipunal
Seithipunal


நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள காஜியாபாத் நகரில் வசித்து வருபவர் சோட்டேலால். இவர் கடந்த 10-ந்தேதியன்று போலீசில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் அவர் தெரிவித்ததாவது, "தனது சகோதரர் சதீஷ் பாலை  ஒரு வாரமாக காணவில்லை" என்று தெரிவித்துள்ளார். 

இதில், சதீஷ் பால் காணாமல் போய் சில நாட்கள் ஆகியும் அவர் மனைவி நீத்து ஏன் புகார் தெரிவிக்கவில்லை? என்று சந்தேகப்பட்டு போலீசார் விசாரணை செய்தனர். ஆனால் அவர்களால் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. 

இந்த நிலையில், சதீஷையும், அவரது மனைவி நீத்துவையும் அடிக்கடி வந்து சந்தித்துச் சென்ற ஹர்பால் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், சதிஷ் பாலின் மனைவி நீத்து, கவுரவ் என்பவரின் உதவியுடன் கணவரைக் கொன்று புதைத்ததை ஹர்பால் ஒப்புக்கொண்டார். 

சதீஷ் குடும்பத்துடன் நெருக்கமான ஹர்பாலுக்கும், சதீஸ் மனைவி நீத்துவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால், கணவரை கொன்றுவிட்டு, திருமணம் செய்துகொள்வதற்கு இருவரும் முடிவெடுத்துள்ளனர். அதன் படி, சதீஷை கொல்வதற்கு தனது நண்பரான கவுரவ் என்பவரை பயன்படுத்திக்கொள்வதற்கு ஹர்பால் முடிவெடுத்துள்ளார். 

இதையடுத்து நீத்து கடந்த 2-ந்தேதி கணவர் சதீஷுக்கு பானத்தில் தூக்கமாத்திரையை கலந்து கொடுத்துள்ளார். இதனால், அவர் ஆழ்ந்து உறங்கியுள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திய நீத்துவும், மற்ற இருவரும் சேர்ந்து சதீஷை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். 

இந்த நிலையில், கள்ளக்காதலன் ஹர்பாலும், அவருடைய நண்பர் கவுரவும் கொத்தனார்கள். இவர்கள் இருவரும் நீத்துவின் வீட்டின் அருகே புதிதாக ஒரு வீட்டை கட்டிக்கொண்டிருந்தனர்.

அந்த இடத்திலேயே சதீஷின் உடலைப் புதைப்பதற்கு அவர்கள் தீர்மானித்து, உடலை தரதரவென்று இழுத்துச் சென்று அங்கு புதைத்து, அதன் மீது கழிவுநீர் தொட்டியை கட்டியுள்ளனர்.

இந்த கொலை சம்பவம் கள்ளக்காதலனின் வாக்குமூலத்தில் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், புதிதாக கட்டப்படும் வீட்டின் உரிமையாளரின் அனுமதியுடன் போலீசார் செப்டிங் டேங்கை உடைத்து, புதைக்கப்பட்டிருந்த சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதைத் தொடர்ந்து, கள்ளக்காதலனுடன், சதீஷ்பாலின் மனைவி நீத்துவையும் போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள நண்பர் கவுரவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near delhi wife and boy friend arrested for kill husband


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->