காரின் மேல் நின்று பிறந்தநாள் கொண்டாட்டம் - பிரபல யூ டியூபர் கைது.! - Seithipunal
Seithipunal


கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி பிரின்ஸ் தீக்ஷித் என்ற யூ டியூபர் டெல்லியில் உள்ள என்ஹெச் 24ல் ஷாக்கர்பூரில் இருந்து காரில் வந்து கொண்டிருந்த போது வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். அதில், பிரின்சும் அவரது ஆதரவாளர்களும் காரின் மீது நின்றுகொண்டு பிறந்தநாள் விழா கொண்டாடும் காட்சி பதிவாகியுள்ளது. 

இதற்கிடையே இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகியுள்ளது. இந்த நிலையில் போலீசார் இந்த வீடியோவின் படி, பிரின்ஸை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீசார் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:- 

"இதுபோன்ற விவகாரங்கள் இனிமேல் நடக்காத வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடைபெற்ற நேரம் மற்றும் அதில் தொடர்புடைய குற்றவாளிகள் உள்ளிட்ட அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த வீடியோ வைரலானாலும், கடந்தாண்டு நவம்பர் மாதமே பிரின்ஸ் திக்ஷித்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near delhi you tuber arrested for birthday celebration on car top


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->