செல்பி எடுத்தபோது தவறி விழுந்த வருங்கால மனைவி.!! 150 அடி உயரத்திலிருந்து குதித்து காப்பாற்றிய வாலிபர்..!  - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் அருகே பரவூரை சேர்ந்த வினு கிருஷ்ணன் என்பவருக்கும், கல்லுவாதுக்கலை பகுதியைச் சேர்ந்த சாந்திரா என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட படி, நேற்று திருமணம் நடைபெற இருந்தது. 

இந்நிலையில், நேற்று முன்தினம் மணமக்கள் இருவரும் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்த பின்னர் பகல் 11 மணியளவில் பாரிப் பள்ளி வேளமானூர் காட்டுப்புரம் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு சென்றனர். 

அங்கு சுமார் 150 அடி உயரத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் தேங்கி குட்டைபோல் காட்சி அளித்தது. இதைப்பார்த்த மணமக்கள் அங்கு நின்று செல்பி எடுத்தனர். அப்போது திடீரென்று சாந்தி்ரா கால் வழுக்கி கீழே விழுந்தார்.

இதைப்பார்த்த வினு கிருஷ்ணன் உடனடியாக குவாரியில் இருந்து கீழே குதித்து தண்ணீருக்குள் தத்தளித்துக்கொண்டு இருந்த தனது வருங்கால மனைவி சாந்திராவை காப்பாற்றினார். 

பிறகு இருவரும் தண்ணீரில் உள்ள குவாரி பாறையை பிடித்துக்கொண்டு காப்பாற்றுமாறு சத்தம் போட்டனர். இதை கேட்டு அந்த பகுதியில் ரப்பர் வெட்டும் பணி செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் ஓடிவந்து கயிற்றை கீழே இறக்கி பாதுகாப்பாக பிடித்து கொள்ளுமாறு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் தண்ணீருக்குள் இறங்கி அவர்களுக்கு முதலுதவி செய்தனர். 

இதற்கிடையே தொழிலாளர்கள் தீயணைப்பு படையினருக்கும், போலீசாருக்கும் தகவளித்தனர். அதன் படி சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் சேர்ந்து இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். 

இந்த விபத்தில் இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டதால் இருவரும் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால், நேற்று நடைபெறுவதாக இருந்த திருமணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

வாலிபர் ஒருவர் தனது வருங்கால மனைவியை 150 அடி உயரத்தில் இருந்து பாறைக்குழிக்குள் குதித்து காப்பாற்றிய சம்பவம் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near kerala future wife fell down in quary youngman rescue


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->