கேரளா : ஞானஸ்நான நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்டவர்களுக்கு உடல்நல பாதிப்பு.! தீவிர விசாரணைக்கு உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கடந்த டிசம்பர் மாதம் 29-ந்தேதி கேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கீழ்வாய்பூர் பகுதியில் ஞானஸ்நான நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணவு சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அதனால், அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். 

அதன் படி, இந்த விழாவில் உணவு சப்ளை செய்த கேட்டரிங் சர்வீஸ் ஏஜென்சி மீது இந்திய தண்டனைச் சட்டம் 268, 296 மற்றும் 272 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திலிருந்து உணவு மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க உணவு பாதுகாப்பு ஆணையருக்கு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near kerala peoples addmitted in hospital for food poisan


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->