போதைப்பொருள் விற்பனை செய்த பிரபல சின்னத்திரை நடிகை கைது.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டம் களக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் அஞ்சு கிருஷ்ணா. சின்னத்திரை நடிகையான இவர் காசர்கோடு பகுதியை சேர்ந்த சமீர் என்பவருடன் சேர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திருக்காக்கரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். 

இந்த நிலையில், இவர்கள் இரண்டு பேரின் நடவடிக்கைகள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு சந்தேகத்தை எழுப்பியது. அதுமட்டுமல்லாமல், பல இளைஞர்களும், இளம்பெண்களும் இவர்களது வீட்டிற்கு வந்து சென்றனர். 

இதை கவனித்த அப்பகுதி மக்கள் இது தொடர்பாக திருக்காக்கரா போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஞ்சு கிருஷ்ணா மற்றும் சமீர் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்தனர். 

அப்போது அங்கு எம்.டி.எம்.ஏ. எனும் ரசாயன போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் இருக்கும் என்று கருதப்படுகிறது. இதையடுத்து போலீசார் போதைப்பொருளை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், அவர்கள் போதை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து சின்னத்திரை நடிகை அஞ்சு கிருஷ்ணாவை கைது செய்தனர். 

அதன் பின்னர், போலீசார் அவரை எர்ணாகுளம் முதல் வகுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த  சமீரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near kerala serial actor arrested for drugs sale


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->