மத்திய பிரதேசம் : திருமண விழாவில் நடனமாடிய வாலிபர் திடீர் சாவு.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவா மாவட்டத்தில், ரேவா நகரை சேர்ந்த மணமகளுக்கும், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் நகரை சேர்ந்த மணமகனுக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மணமகன் மற்றும் மணமகளின் உறவினர்கள், நண்பர்கள் திரளாக வந்திருந்தனர். 

மேலும், இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக மணமகனின் தோழர் அபய் சச்சான் என்பவரும் வந்துள்ளார். இவருடன் மற்ற நண்பர்களும் சேர்ந்து கொண்டு செவ்வாய் கிழமை இரவு நடைபெற்ற திருமண ஊர்வலத்தில் கலந்துகொண்டு நடனமாடிச் சென்றனர். அப்போது, சச்சான் திடீரென மயங்கி விழுந்துள்ளார். 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனே அவரை தூக்கி கொண்டு சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சச்சான் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். 

சச்சான், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் நகரின் ஹன்ஸ்புரம் பகுதியை சேர்ந்தவர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். திருமண விழாவில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near madhya pradesh young man died in marriage function


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->