பஞ்சாப் : கணவரை காணவில்லை என்று புகார் அளித்த மனைவி - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில் உள்ள பக்சிவாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜஸ்வீர் கவுர். இவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது கணவர் காலாசிங் காணாமல் போய் விட்டார் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

ஆனால் அவர் குறித்த தகவல் எதுவும் கிடைக்காத நிலையில், போலீசாருக்கு கவுரின் மீது சந்தேகம் எழுந்ததனால், அவரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில், கவுர் தனது கணவர் காலாசிங்கை கொலை செய்து, வீட்டில் உள்ள கழிவறை தொட்டியில் புதைத்துள்ளது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் கவுர் வீட்டில் காலாசிங்கின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து காவல் நிலையத்தின் உயரதிகாரி மெஹர் சிங் தெரிவித்ததாவது, "ஒரு மாதத்திற்கு முன்பு தன் கணவரை காணவில்லை என்று புகார் வந்தது. அதன் பேரில் நாங்கள் தீவிர விசாரணை நடத்தினோம். அதில், காலாசிங்கை கொன்று, வீட்டின் கழிவறையில் மனைவி புதைத்தது தெரிய வந்தது. 

தற்போது, அவரின் உடலை வெளியே எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்பின்பு அவர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா? என்று விசாரணை செய்து வருகிறோம். அப்படி இருக்குமென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சமத்துவம் குறித்து காலாசிங்கின் சகோதரி பிங்கி தெரிவித்ததாவது, "எனது சகோதரருக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுரை கடுமையாக தண்டிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near punjap wife arrested for kill husband


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->