சத்தீஷ்கர் : பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரை சக போலீசார் சுட்டு கொலை.! - Seithipunal
Seithipunal


சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள காங்கர் மாவட்டம் பானுபிரதாப்பூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. பொதுவாக ஓட்டுபெட்டியை நாற்பத்தைந்து நாட்கள் பாதுகாப்புடன் வைப்பது வழக்கம். அதன்படி ஓட்டுப்பெட்டி அங்குள்ள அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள அறையில் வைக்கப்பட்டது. 

அந்த அறைக்கு ஆயுதப்படை போலீஸ் ஏட்டு சுரேந்திர பகத் மற்றும் போலீஸ்காரர் புருஷோத்தம் சிங் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்த வாக்குவாதம் சில நிமிடத்தில் தகராறாக மாறியது. இதனால், ஆத்திரம் அடைந்த புருஷோத்தம் சிங் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் ஏட்டு சுரேந்திர பகத்தை சரமாரியாக சுட்டுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே பகத் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் மற்றும் போலசீார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து புருஷோத்தம் சிங்கை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near sathiskar police officer arrest for co police aet kill


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->