நேபாள விமான விபத்து | சாகசம் செய்ய சென்ற இந்தியர்கள் பலி!
Nepal Flight crash Indians death
நேபாள விமான விபத்தில் பாராகிளைடிங் சாகசம் செய்ய சென்ற 4 இந்தியர்கள் பலியான சோகசம்பவம் அரங்கேறியுள்ளது. மொத்தமாக 5 இந்தியர்கள் இந்த விமான விபத்தில் பலியாகியுள்ளனர்.
இன்று நேபாளத்திருந்து பொக்காரா விமான நிலையம் நோக்கி வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம், தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
![](https://img.seithipunal.com/media/fqwef.png)
இந்த விமானத்தில் பயணித்த 72 நபர்களில் இந்தியாவைச் சேர்ந்த அபிஷேக் குஷ்வாலா (வயது 25), பிஷால் சர்மா (வயது 22), அனில் குமார் ராஜ்பர் (வயது 27), சோனு ஜெய்ஸ்வால் (வயது 35), சஞ்சயா ஜெய்ஸ்வால் ஆகிய 5 பேர் என்பது தெரியவந்துள்ளது.
இதில், நான்கு பேர் இந்தியாவிலிருந்து பொக்காராவுக்கு சென்று பாராகிளைடிங் செய்ய திட்டமிட்டிருந்த நோ;அளியில் பலியாகியுள்ளனர்.
![](https://img.seithipunal.com/media/IMG_20230115_144327-ns9wk.jpg)
விமானத்தில் பயணம் செய்த 72 பேரும் உயிரிழந்திருப்பார்கள் என்றும், இதுவரை 68 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது என்றும் தகவல் கிடைத்துள்ளது.
இந்த கொடூர விமான விபத்து குறித்து பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர விமான விபத்தில் இந்தியர்கள் உட்பட விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது வேதனை அளிக்கிறது" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
English Summary
Nepal Flight crash Indians death