இனி பெட்ரோல் கிடையாது - டெல்லியில் வந்த புதிய கட்டுப்பாடு..!
no petrol to old vehicles in delhi for air pollution
நாட்டின் தலைநகர் டெல்லியில் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்களுக்கு, ஏப்ரல் 1ம் தேதி முதல் பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் வழங்கப்படாது என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் வெளியிட்டார். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் டெல்லியில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசு, தனது வாக்குறுதிகளில் மாசற்ற டெல்லியை உருவாக்குவோம் என்று தெரிவித்திருந்தது.
அதன் ஒரு பகுதியாக, இனி டெல்லியில் 15 ஆண்டுகள் முடிந்த வாகனங்களுக்கு எரிபொருள் கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும் டிசம்பர் 2025-க்குள் டெல்லியில் உள்ள 90 சதவீத பொது சிஎன்ஜி பேருந்துகள் படிப்படியாக நிறுத்தப்பட்டு மின்சார பேருந்துகளால் மாற்றப்படும் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
no petrol to old vehicles in delhi for air pollution