ஐபிஎல் 2025: தினேஷ் கார்த்திக்கின் மோசமான சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா..!
Rohit Sharma Equals Record After Getting Out On A Duck
இந்திய உள்ளூர் போட்டியான ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றுது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியில் டாஸ் வென்று சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன் அணி 20 ஓவர் முடிவில் 09 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கைள எடுத்தது. 156 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி இறுதியில் 19.1 ஓவர் முடிவில் 06 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. இதனால் சென்னை அணி 04 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இதற்கிடையே, மும்பை அணியின் ஆட்டத்தின் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா முதல் ஓவரின் 04-வது பந்தில் டக் அவுட்டானார். இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான வரலாற்று சாதனையை மேக்ஸ்வெல் மற்றும் தினேஷ் கார்த்திக் உடைய ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.
English Summary
Rohit Sharma Equals Record After Getting Out On A Duck