நூர் அஹமதின் அபார சுழல், ருத்துராஜ் , ரச்சினின் அதிரடி; மும்பையை பொட்டலம் கட்டிய சென்னை அணி..! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 2025 சீசனின் 03-வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி முதல் ஓவரின் 04-வது பந்தில் ரோகித் சர்மா டக் அவுட்டானார். ரியான் ரிக்கல்டன் 13 ரன்னும், வில் ஜாக்ஸ் 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். மும்பை அணி 36 ரன்கள் எடுப்பதற்குள் 03 விக்கெட்களை இழந்து அதிர்ச்சியளித்தது.

04-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடி 51 ரன்கள் சேர்த்தனர். நூர் அகமது பந்தில் 29 ரன்னில் சூர்யகுமார் அவுட்டாக, அடுத்து திலக் வர்மா 31 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. கடைசியில் தீபக் சஹர் 28 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், மும்பை அணி 20 ஓவர் முடிவில் 09 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் நூர் அகமது 04 விக்கெட்டும், கலீல் அகமது 03 விக்கெட்டும் வீழ்த்தினர். 156 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி இலக்குடன் விளையாடி வரும் சென்னை அணிக்கு கேப்டன் ருதுராஜ் அதிரடியாக விளையாடி, அரைசதம் அடித்தார்.

சென்னை அணிக்கு, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ராகுல் திரிபாதி 02 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து, ஜோடி சேர்ந்த கேப்டன் ருதுராஜ் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஜோடி சிறப்பாக ஆடியது. ரச்சின் ரவீந்திரா  ஒருமுனையில் நிதானமாக ஆட, மறுமுனையில் கேப்டன் ருதுராஜ் அதிரடி காட்டி, 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். இது அவரது அதிவேக அரை சதமாகும்.

தொடர்ந்து, மும்பை அணியின் இளம் வீரர் விக்னேஷ் புத்தூரின் சுழலில், ருதுராஜ் 53 எடுத்து ஆட்டமிழக்க, துபே 09 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அடுத்து வந்த தீபக் ஹூடா 03 ரன்களிலும், சாம் கரண் 04 ரங்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக வந்த ஜடேஜா 17 ரன்களில் ரன் அவுட் ஆனார். இறுதியாக வந்த தோனி இரண்டு பந்துகளில் ரன்கள் எதுவும் எடுக்கவில்லை. இறுதிவரை களத்தில் இருந்த ராச்சின் ரவீந்திரா 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இதன் மூலம் சென்னை அணி 04 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை முதல் லீக் ஆட்டத்தில் வீழ்த்தி வெற்றிப் பெற்றுள்ளது. மும்பை அணி சார்பாக விக்னேஷ் புத்தூர் சிறப்பாக பந்து வீசி 03 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வில் ஜேக்ஸ் மற்றும் தீபக் சாகர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tata IPL 2025 Chennai team defeated Mumbai and won


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->