பேய் பயம்.. ஒடிசா ரயில் விபத்தால் பள்ளி கட்டிடம் இடிப்பு.! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். பலர் பய படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த ரயில் விபத்து குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஒடிசா ரயில்வே விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அருகிலுள்ள பாகாநாகா அரசு உயர்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்தன.

மேலும் பள்ளி வளாகம் பிணவறையாக மாற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது ஒடிசா மாநிலத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், உயிரிழந்த உடல்களை வைத்த அறைக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சமடைந்து மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இதுகுறித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் பள்ளியில் உயிரிழந்த உடல்கள் வைக்கப்பட்டு பிணவறையாக இருந்த கட்டிடத்தை இடித்து புதிதாக கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் கோடை விடுமுறை முடிவதற்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி ஜூன் 19ஆம் தேதிக்குள் இந்த இடத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டித் தரப்படும் என ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Odisha train accident school building demolished


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->