நம் அனைவருக்குமே ஒமைக்ரான் தொற்று வரும்., யாரும் பயப்பட வேண்டாம்., இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மருத்துவர் பகீர் பேட்டி.!
omicron for all
கடந்த 15 நாட்களாக நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிதீவிரமாக பரவிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் நாளொன்றுக்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இதேபோல் தலைநகர் டெல்லியிலும் கொரோனா நோய் தொற்று சுனாமி போல் பரவி வருகிறது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், தலைநகர் டெல்லி, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 8 மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து உள்ளதாகவும், நாடு முழுவதும் 28 மாநிலங்களில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், மாநிலத் தலைநகரங்களை பொறுத்தவரை தமிழகத்தின் தலைநகர் சென்னை, மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஒவ்வொருவருக்கும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று ஏற்படும் என்று, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய தொற்று நோயியல் துறையின் விஞ்ஞான ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் ஜெயபிரகாஷ் முலி தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தெரிவிக்கையில், "ஒமைக்ரானின் மாறுபாடு கிட்டத்தட்ட தடுக்க முடியாத ஒன்று, இதன் காரணமாக அனைவரும் ஒமைக்ரானால் பாதிக்கப்படுவார்கள். ஒவ்வொருக்கும் இந்த நோய் தொற்று நிச்சயமாக வந்து தான் செல்லும்.
ஆனால், ஒமைக்ரானால் அச்சப்படத் தேவையில்லை. இது லேசானது. டெல்டாவுடன் ஒப்பிடுகையில் ஒமைக்ரான் பாதிப்பை ஏற்படுத்தாது.
இன்னும் சொல்வதென்றால் நம்மில் பலருக்கும் இந்த நோய் தொற்று ஏற்பட்டதை கூட அறியமாட்டோம். இந்த நோய் தொற்றின் மூலம் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடும். இதன் காரணமாகத்தான் மற்ற நாடுகள்போல் இந்தியா மோசமாக பாதிக்கப்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.