#BigBreaking || முதல்முறையாக ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட மாநிலம்.! இந்தியாவில் இதுவரை இத்தனை பேருக்கு பாதிப்பா?
omicron in Andhra
உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் உலக மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்படுத்தி இருக்கிறது. இதற்க்கு முக்கிய காரணம் இது மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தது தான்.
இந்த ஒமைக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஆங்காங், இஸ்ரேல், போட்ஸ்வானா ஆகிய நாடுகளிலுக்கு பரவி, பின் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 59 நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் வைரசால் 36 பேர் (சற்றுமுன் மூவருக்கு பாதிப்பு ஏற்பட்டது உட்பட) பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒமைக்ரான் தொற்றால் இந்தியாவில் கொரோனா 3-வது அலை தாக்க வாய்ப்பு உள்ளதா என்ற அச்சமும் மக்களிடையே எழுந்துள்ளது.
இன்று, இத்தாலியிலிருந்து சண்டிகர் வந்த நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகி உள்ளது. கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி இத்தாலியில் இருந்து வந்த நபருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் இரண்டு தவணை பைசர் தடுப்பூசி செலுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோல், ஆந்திர மாநிலத்தில் முதல் ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. அயர்லாந்து நாட்டில் இருந்து மும்பை வழியாக விசாகப்பட்டினம் வந்த 34 வயது நபருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கர்நாடக மாநிலத்தில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.