ஒமைக்ரான் எதிரொலி: கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை.!
OMICRON ISSUE DELHI
ஒமைக்ரான் எதிரொலி: கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவி கொண்டு இருக்கிறது. நாட்டில் முதல் பாதிப்பு, கர்நாடக மாநிலம் பெங்களூர் மருத்துவர் உள்பட 2 பேருக்கு கண்டறியப்பட்டது.
அதனை தொடர்ந்து, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, கேரளா, ஆந்திரா, சண்டிகர், தெலுங்கானா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் மகாராஷ்டிரா, டெல்லி மாநிலத்தில் அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தலைநகர் டெல்லியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்து, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டிலேயே தலைநகர் டெல்லியில் அதிகளவாக 57 பேர் ஒமைக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.