மேட்டூர் அனல்மின் நிலையத்தில் தீ விபத்து - 2 பேர் பலி; 2 பேர் மாயம்.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூரில் செயல்பட்டு வரும் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் 840 மெகாவாட், இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் என்று மொத்தம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், மேட்டூர் அனல்மின் நிலையத்தில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி போலீசார் தீயணைப்புத் துறையினருடன் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதற்கிடையே இந்தத் தீ விபத்தில் சிக்கி மூன்று பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த விபத்து நடந்த பகுதியில் பணிபுரிந்து வந்த இரண்டு பேர் மாயமாகியுள்ளனர். அவர்களையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples died and 2 peoples missing in mettur power station


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->