ரெயில்களில் நோ அசைவம்... ஒன்லி சைவம் மட்டும் தான் - இந்தியன் ரெயில்வே அதிரடி அறிவிப்பு.!
only veg food supply in vande bharat train
நாடு முழுவதும் பயணிகளின் போக்குவரத்துக்காக இயக்கப்படும் ரயில்களில் பல்வேறு வசதிகளை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், வந்தே பாரத் உள்ளிட்ட சொகுசு ரயில்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றனர்.

அப்படி இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் சைவம் அசைவம் என்று இருவகை உணவுகள் வழங்கப்படுகிறது. இருப்பினும் ரெயில்களில் தூய விரதம் இருப்பவர்கள், கோவில்களுக்கு செல்வோர் ரயில்களில் வழங்கப்படும் உணவு மற்றும் குளிர்பானங்களால் பாதிக்கப்படுவதாகவும், ரயில்களில் வழங்கப்படும் உணவை சோதித்து பார்ப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான், இந்திய ரெயில்வே பயணிகளின் அச்சத்தை போக்கும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, டெல்லியில் இருந்து கத்ரா வரை இயங்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் பயணிகளுக்கு சைவ உணவு மட்டுமே வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், பயணிகளுக்கு சைவ உணவை மட்டும் வழங்கும் இந்தியாவின் முதல் ரயில் இதுவாகும்.
English Summary
only veg food supply in vande bharat train