மணிப்பூரில் மக்கள் சுந்திரமாக நடமாட வேண்டும்; இடையூறு செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை; அமித்ஷா உத்தரவு..!
People should move freely in Manipur
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று டெல்லியில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மணிப்பூரின் பாதுகாப்பு நிலைமை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இக் கூட்டத்தில், மணிப்பூர் கவர்னர், மத்திய உள்துறைச் செயலாளர், புலனாய்வு அமைப்பின் இயக்குநர், ராணுவ துணைத் தலைவர், கிழக்கு கட்டளையின் ராணுவத் தளபதி, எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்), அசாம் ரைபிள்ஸ் இயக்குநர் ஜெனரல்,மணிப்பூர் பாதுகாப்பு ஆலோசகர், உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், மணிப்பூர் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது; பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மணிப்பூரில் நீடித்த அமைதியை நிலைநாட்ட முழுமையாக உறுதி பூண்டுள்ளது என்று குறிப்பிட்டார். அத்துடன், மணிப்பூர் பாதுகாப்பு தொடர்பாக தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது என்று தெரிவித்தார்.
எதிர்வரும், 2025 மார்ச் 8 முதல் மணிப்பூரில் உள்ள அனைத்து சாலைகளிலும் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்யவேண்டும். இடையூறு ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும், மணிப்பூரின் சர்வதேச எல்லையில் நியமிக்கப்பட்ட நுழைவு முனையங்களின் இருபுறமும் வேலி அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும். அத்துடன், மணிப்பூரை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்றும், போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஒட்டுமொத்த வலைப்பின்னலும் தகர்க்கப்பட வேண்டும் என்றும் அமித்ஷா குறிப்பிட்டார்.
English Summary
People should move freely in Manipur