கோரமண்டல் ரெயில் விபத்து - காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம் செய்ய மருத்துவமனையில் குவியும் மக்கள்.!!
peoples donate blood for coramandal train accident
கோரமண்டல் ரெயில் விபத்து - காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம் செய்ய மருத்துவமனையில் குவியும் மக்கள்.!!
ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் பஹானாகா ரெயில் நிலையம் அருகே கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரெயில், நேற்று இரவு எதிர்பாராதவிதமாக சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அப்போது பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்றுகொண்டிருந்த யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரெயில், விபத்துக்குள்ளான ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. மொத்தம் மூன்று ரெயில்கள் ஒரே நேரத்தில் விபத்துக்குள்ளானதில் பல பயணிகள் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அனைவரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது என்றும், 900 பேர் படுகாயமடைந்து உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த ரெயில் விபத்து காரணமாக ஒடிசாவில் இன்று மாநில அளவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஒடிசாவில் இன்று அரசு சார்பில் நடைபெற இருந்த விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அனைத்து அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த ரெயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம் செய்ய பாலசோர் மருத்துவமனையில் தன்னார்வலர்கள் குவிந்து வருகின்றனர். ரெயில் விபத்தில் ஏராளமானோர் காயமடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் ஏராளமான தன்னார்வலர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ரத்தம் வழங்கி வருகின்றனர்.
English Summary
peoples donate blood for coramandal train accident