''உங்கள் எதிர்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்; டொனால்டு டிரம்பிற்கு, பிரதமர் மோடி வாழ்த்து..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் இன்று பதவியேற்றுக்கொண்டார். இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு அவர் அமெரிக்க அதிபராக பதவியேற்றார். அமெரிக்க உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி ராபர்ட்ஸ் ஜுனியர், டிரம்புக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுக்கொண்டுள்ள டிரம்பிற்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரதமர் மோடியும் டிரம்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றுள்ள எனது அன்பு நண்பர் அதிபர் டொனால்டு டிரம்பிற்கு வாழ்த்துகள். இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையிலும், உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையிலும் மீண்டும் ஒருமுறை நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன். உங்கள் எதிர்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள். " என்று மோடி அவர்கள் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi congratulates Trump on his inauguration as US President


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->