அரசு பேருந்தில் பாட்டு பாடி ரகளை - கல்லூரி மாணவர்களுக்கு போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


அரசு பேருந்தில் பாட்டு பாடி ரகளை - கல்லூரி மாணவர்களுக்கு போலீசார் வலைவீச்சு.!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கவியரசு கண்ணதாசன் நகர் நோக்கி மாநகர பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றது. இந்தப் பேருந்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் ஏறியுள்ளனர்.

இவர்கள் பேருந்தில் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தாளம் போட்டும், பாட்டு பாடியும் ரகளையில் ஈடுபட்டு வந்தனர். இதைப்பார்த்த பேருந்து நடத்துனர் மாணவர்களைக் கண்டித்துள்ளார். 

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள், நடத்துனருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கோயம்பேடு நுழைவு வாயிலில் பேருந்தை நிறுத்திய நடத்துனர், சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 

அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதை பார்த்த கல்லூரி மாணவர்கள், பேருந்தில் இருந்து கீழே இறங்கி தலைதெறிக்க ஒட்டியுள்ளனர். 

இதையடுத்து போலீசார் தப்பி ஓடிய கல்லூரி மாணவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police investigation of college students play drums in govt bus


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->