தோல் மீளுருவாக்கம் இயந்திரம் சென்னையில் அறிமுகம்.!
Skin regeneration machine launched in Chennai
சென்னை, பெங்களூரு மற்றும் கொச்சி முழுவதும் உள்ள 12 Vurve Signature Salon விற்பனை நிலையங்களிலும் MEGAN பயன்பாடு செயல்படுத்தப்பட இருக்கிறது.
ஆடம்பர சலூன் அனுபவங்களில் முன்னோடியான Vurve Signature Salon, ஸ்பெயினின் புகழ்பெற்ற தோல் பராமரிப்பு நிறுவனமான Skeyndor உடன் இணைந்து, தோல் பராமரிப்பு சிகிச்சைகளை மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட தோல் மீளுருவாக்கம் இயந்திரத்தை சென்னையில் அறிமுகப்படுத்தியது.
சென்னையில் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் VURVE சிக்னேச்சர் சலூனின் இணை நிறுவனர்களான ரெபேக்கா சாமுவேல், மனோஜ் சாமுவேல், சுஷில் தாமஸ் ஆகியோர் மற்றும் ஸ்கெய்ன்டர் இந்தியாவின் பயிற்சித் தலைவர் பிரியா பண்டாரி, SKEYNDOR இன் சர்வதேச பயிற்சி மற்றும் கண்டுபிடிப்பு மேலாளர் திருமதி பெப்பி கில்லன் மார்டினெனா ஆகியோர் கலந்து கொண்டனர்
MEGAN என்பது Hi-Freq, Dermaboost மற்றும் Deep RGB தொழில்நுட்பங்களின் சக்திவாய்ந்த விளைவுகளை ஒன்றிணைக்கும் ஒரு மேம்பட்ட Tri Synergy Tech™ கண்டுபிடிப்பு ஆகும்.
இந்த பல-சிகிச்சை அமைப்பு 4 மடங்கு சிறந்த முடிவுகளை வழங்கும் வகையிலும் மேலும் தோல் மீளுருவாக்கத்தை மேம்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.இது அழகுசாதனத் துறையில் ஒரு கேம்-சேஞ்சராக அமைந்து உடனடி மற்றும் நீண்டகால தோல் மாற்றத்தை உறுதி செய்கிறது
சென்னை, பெங்களூரு மற்றும் கொச்சி முழுவதும் உள்ள 12 Vurve Signature Salon விற்பனை நிலையங்களிலும் MEGAN பயன்பாடு செயல்படுத்தப்பட இருக்கிறது.
English Summary
Skin regeneration machine launched in Chennai