யார் அந்த தியாகி? - அதிமுக எம்.எல்.ஏக்களால் பரபரப்பு.!!
admk mlas wear badge in tn assembly
சட்டசபைக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் யார் அந்த தியாகி? என்று பேட்ஜ் அணிந்து வந்ததாள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பொது பட்ஜெட்டைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றன.
இதையடுத்து கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் துறை ரீதியான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் அமைச்சர்கள் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். மேலும் துறை ரீதியான கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக சட்டசபையின் இன்றைய நிகழ்வின்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் அந்த தியாகி யார்? என்று பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வருகை தந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் என்ற புகாரை அடுத்து அமலாக்கத்துறை சோதனை நடத்தியதால் இவ்வாறு பேட்ஜ் அணிந்து வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
admk mlas wear badge in tn assembly